ஈப்போ, செப்டம்பர் -22, பேராக், ஈப்போ Taman Cempaka-வில் வீட்டொன்றின் கழிவறைக் குழியில் பாத்திக் ரக மலைப்பாம்பு புகுந்ததால், உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
பதற்றத்தில் உடனடியாக தீயணைப்பு மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து கழிவறையை உடைத்து பாம்பைப் பிடித்துச் சென்றனர்.
கழிவு நீர் குழாய் வழியாக வந்திருக்கலாம் என நம்பப்படும் அம்மலைப்பாம்பு, விஷமில்லாதது என தீயணைப்பு மீட்புத் துறை உறுதிப்படுத்தியது.
அதன் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படத்தில், அகல விரிந்த கண்களுடன் மலைப்பாம்பின் தலை கழிவறைக் குழியிலிருப்பது தெரிகிறது.
அப்பதிவைப் பார்த்த வலைத்தளவாசிகள், எந்த கெட்ட கனவு நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டதே என கருத்துக் கூறினர்.
இனி கழிவறை செல்லும் போதெல்லாம் பாம்பின் ஞாபகம் அல்லவா நமக்கு வந்து போகும் என, தங்களின் பீதியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.