
ஈப்போ, மார்ச் 30 – நோன்பு மாதம் என்றாலே தென்னிந்திய முஸ்லிம் பள்ளிவாசல்களில் சுவைப்பட நோன்பு கஞ்சி வழங்கப்படுவது அதிகமானோரின் நினைவுக்கு வரும். முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள் அல்லாதாருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்படுவதுதான் இதன் சிறப்பு . அந்த வகையில் பேராவில் , ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளி வாசலில் நோன்புபெருநாளை முன்னிட்டு இன்று முதல் பொது மக்களுக்கு நோன்பு கஞ்சி விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சேவையை வழங்கி வருவதாக ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் முகமட் யூசோப் கூறினார்.