
ஈப்போ, ஜூன் 3- நடிகர் விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் இதர கலைஞர்கள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு ஈப்போவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் படப்பிடிப்பிற்கு அப்பாற்பட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அவர்கள் ரசிகர்களையும் சந்தித்து வருகின்றனர்.
நேற்று வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டு அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார் நடிகர் யோகி பாபு. அவரைப் பார்த்த சந்தோஷத்தில் ஆலயத்திற்கு வந்தவர்கள் புகைப்படம் மற்றும் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.