
ஈப்போ, பிப் 1 – ஈப்போ, Chemor -ரில், Tanah Hitam, Kampung Ulu Kuang ஆகிய இரு இடங்களில், புலிகளின் நடமாட்டம் தொடர்பில் புகார்கள் பெறப்பட்டிருப்பதை பேராக் வனவிலங்கு துறையினர் உறுதிப்படுத்தினர் .
அந்த புகார்களை விசாரித்ததில், அப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம் இருப்பது உண்மையென உறுதிப்படுத்தப்பட்டதாக, அத்துறையின் இயக்குநர் Yusoff Shariff தெரிவித்தார்.
அப்பகுதிகளில் புலிகளின் கால் தடங்கள் கண்டறியப்பட்டதோடு, கால்நடைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் புலிகளைப் பிடிக்க பொறி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார் .