
ஈப்போ, பிப் 3- ஈப்போ கல்லுமலை ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தைப்பூசத்தை முன்னிட்டு இன்றிரவு 7 மணியளவில் புந்தோங் சுங்கை பாரி ஸ்ரீ மாகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படும் இரத ஊர்வலம் இன்று நள்ளிரவு வாக்கில் கூனோங் சிரோ கல்லுமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் சென்றடையும். ரத ஊர்வலம் புறப்படும் சாலைகளில் வழிநெடுக அர்ச்சனைகள் நடைபெறும். ஈப்போ தைப்பூச ஏற்பாடுகள் குறித்து மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யுஸ்ரி ஆலய தலைவர் விவேகனந்தன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தினார். தைப்பூசத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதோடு தைப்பூச விழா முடிவடையும்வரை தற்காலிக போலீஸ் சாவடி ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.