Latestமலேசியா

ஈப்போ தைப்பூசம் ஏற்பாடுகள் மும்முரம்

ஈப்போ , ஜன 6 – கோலாலம்பூரிலுள்ள பத்துமலை திருத்தலம் மற்றும் , பினாங்கில் தண்ணீர் மலை ஆகிய இரு ஆலயங்களுக்கு அடுத்து நாட்டில் பெரிய அளவில் ஈப்போ கல்லுமலை சுப்பிரமணியர் ஆலயத்திலும் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஈப்போ குனோங் சிரோவில் எழுந்தருளியுள்ள கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலயத்தின் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம்.விவேகனந்தா வழங்கும் விளக்கத்தை இப்போது கேட்போம் .

இதனிடையே சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் ஈப்போ தைப்பூச திருவிழா தொடர்பாக பேராக் மாநிலத்திலுள்ள இந்திய உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கலந்துரையாடல் நிகழ்வு ஈப்போ கல்லுமலை அருள் மிகு சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஈப்போ தேவஸ்தானத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியம் செட்டியார் என்ற ஜெயமணி உட்பட நிர்வாக உறுப்பினர்கள், போலீஸ் அதிகாரிகளான இன்ஸ்பெக்டர் Guna , DSP Suresh Kumar , இன்ஸ்பெக்டர் வேலம்மாள் , இன்ஸ்பெப்டர் பனிமலர் , இன்ஸ்பெக்டர் சிவா, இன்ஸ்பெக்டர் ஆனந்தன், ASP Mashini , இன்ஸ்பெக்டர் Devendran ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!