Latestமலேசியா

ஈப்போ தைப்பூசம் ரத ஊர்வலத்தின்போது கூட வேண்டாம் – பக்தர்களுக்கு ஆலோசனை

ஈப்போ. ஜன 14 – தைப்பூசத்தை முன்னிட்டு ரதம் ஊர்வலம் செல்லும் வழி நெடுகிலும் கூட வேண்டாமென ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் எம். விவேகானந்தா கேட்டுக்கொண்டார். தைப்பூசத்திற்கான வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அரசாங்கம் வெளியிட்டிருக்கும் SOP விதிமுறைகளை கடுமையாக பின்பற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாண்டு ரத ஊர்வலத்தின்போது ஆலய குருக்கள், நாதஸ்வர தவில் கலைஞர்கள் மற்றும் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள் உடன் செல்ல முடியும். எனவே ரதம் ஊர்வலத்தின்போது உடன் வரவேண்டாமென பக்தர்களை மிகவும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம் என விவேகானந்தா தெரிவித்தார். ஜனவரி 16 ஆம் தேதி Buntong ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரவு 8 மணியளவில் புறப்படும் ரதம் மறுநாள் அதிகாலை ஒரு மணியளவில் கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலயம் வந்தடையும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!