பெட்டாலிங் ஜெயா, பிப் 21 – ஈப்போ மருத்துவமனை வளாகத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழ்ந்த தகராறு சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்தனர்.
18, 20 மற்றும் 21 வயதுடைய அந்த மூவரும் மேடான் கிட் வளாகத்திலும் Jalan Horley யிலும் நேற்று கைது செய்யப்பட்டதாக பேரா போலீஸ் தலைவர்Mior Faridalathrash தெரிவித்தார்.
நேற்று முன் தினம் இரவு மணி 11. 50 அளவில் ஈப்போ மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் கார் நிறுத்தும் பகுதியில் 24 வயதுடைய மற்றொரு நபரும் கைதுசெய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளதாக Mior Faridalathrash தெரிவித்தார்.