
கோலாலம்பூர், பிப் 22 – ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களாக மூன்று இந்தியர்கள் உட்பட 25 பேர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். DAP சார்பில் சிவம் காளிமுத்து, லோரன்ஸ் பழனிசாமி உட்பட 11 பேரும் ர். பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த லோகேஸ்வரி சுப்ரமணியம் உட்பட ஐவரும், அமனா கட்சியின் சார்பில் இருவரும் மாநகர் மன்ற உறுப்பினர்களாக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அம்னோவை பிரதிநிதித்து ஐவர் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ஊராட்சி மன்றங்களுக்கு பொறுப்பு வகிக்கும் ஆட்சிக் குழு உறுப்பினர் Sandrea Ng, ஈப்போ மேயர் டத்தோ Rumaizi Baharin முன்னிலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனிடையே ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்களில் ம.இ.கா மற்றும் ம.சீ.ச பிரதிநிதிகள் எவரும் இடம்பெறவில்லை. இது குறித்து வினவப்பட்டபோது தேசிய முன்னணி வழங்கிய பெயர் பட்டியலில் அவ்விரு கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் முன்மொழியப்படவில்லை என Sandrea Ng கூறினார்.