கோலாலம்பூர், நவம்பர்-6 – ஈராண்டுகளுக்கு முன்னர் 12 வயது காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், 21 வயது இளைஞனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 4 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தம் மீதான 2 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்ட முடிவில் Mohd Kafli Che Ali உறுதியாக இருந்ததால், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
இரு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 6 ஆண்டுகள் சிறையும், 2 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
ஆனால், அவற்றை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதால், இன்று தொடங்கி 12 ஆண்டுகளுக்கு அவ்விளைஞன் சிறைவாசம் அனுபவிப்பான்.
என்னதான் காலதர்களாக இருந்தாலும், வயது குறைந்த பிள்ளையை அதுவும் 12 வயது சிறுமியை தனது இச்சைக்கு பலியாக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.