நியு யோர்க், பிப் 17 – நியு யோர்க்கில் ஈராண்டுகள் காணாமல் போயிருந்த 6 வயது சிறுமி, வீட்டின் பாதாள அறையை நோக்கிச் செல்லும், மாடிப்படியின் அடியில் அமைக்கப்பட்டிருந்த ரகசிய பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அச்சிறுமியை அவரது சொந்த பெற்றோரே இத்தனை நாட்களும் கடத்தி மறைத்து வந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் அச்சிறுமியை பாதுகாக்கும் உரிமையை ஏற்கனவே சட்டப்படி இழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.