
துபாய் , ஜன 11 – ஈரானின் முன்னாள் அதிபர் Hashemi Rafsnjani யின் மகளுக்கு ஈரான் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. சமூக நடவடிககையாளரான Faezeh Hashemi க்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த விவரங்களை வழக்கறிஞர் வெளியிடவில்லை. நாட்டின் ஆட்சி முறைக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக Hashemi க்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் என கடந்த ஆண்டு ஈரான் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். போலீஸ் தடுப்புக் காவலில் குர்திய இளம் பெண் ஒருவர் மரணம் அடைந்தது தொடரபாக தெஹ்ரானில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதற்கு தூண்டுதலாக இருந்ததன் பேரில் Hashemi கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.