
சென்னை , பிப் 6 – தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் , எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்து சர்ச்சை நீடித்த நிலையில் அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாமல் இருப்பதற்காக இரு தரப்புக்குமிடையே இணக்கம் காணப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஓ.பி.எஸ் வேட்பாளர் செந்தில் முருகன் மீடடுக்கொள்ளப்பட்டுள்ளார். அதோடு இந்த இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தின் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம் என ஓ.பி.எஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.