
சென்னை, மார்ச் 2- தமிழ் நாடு, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. முதல் சுற்றிலிருந்தே அவர் முன்னணியில் இருந்துவருகிறார். 11 ஆவது சுற்று முடிவிலும் 51,168 வாக்குகள் பெரும்பான்மையில் அவர் முன்னணியில் இருந்து வருகிறார். தற்போதுவரை அவர் 83,538 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதிமுகவின் கே.எஸ் தென்னரசு 32,360 வாக்குகளைப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலில் 77 பேர் போட்டியிட்ட நிலையில் 75 பேர் வைப்புத் தொகை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிகிறது. நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன் 5,66 வாக்குகளையும், தே,மு.தி.கவின் ஆனந்ந் 836 வாக்குளையும் பெற்றனர். இளங்கோவனின் வெற்றி உறுதியானதை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே இந்த இடைத் தேர்தலில் தாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்வதாக தமிழ் நாடு பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.