கீவ், மார்ச் 7 – ரஷ்ய படையெடுப்பால் உக்ரேனிலிருந்து இன்னும் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் , வெளியில் கொட்டும் பனியை சேகரித்து , கொதிக்க வைத்து சுத்தமான குடிநீரைப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுமி, ஒக்திர்கா (Sumy, Okhtyrka) நகரில் உள்ள மின் உற்பத்தி ஆலையை ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்கியிருப்பதால், தாங்கள் வசிக்கும் பதியில் சுத்தமான குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதாக, அந்நகரில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் மாணவி மாளவிகா மானோஜ் ( Malavika Manoj ) என்பவர் தெரிவித்துள்ளார்.
அந்தகரில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயில்கின்றனர் .