கோலாலம்பூர், மார்ச் 7 – உக்ரேனில் மலேசிய மாணவர்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கும் 45 வினாடிகள் கொண்ட காணொளி உண்மையானது அல்ல என வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
அதன் தொடர்பில் விசாரணையும், அந்த காணொளியின் நம்பகத்தன்மையை உறுதிச் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அந்த காணொளி பொய்யானது என தெரிய வந்தததாக அவ்வமைச்சு குறிப்பிட்டது.