Latestஉலகம்

உக்ரேன் படையெடுப்பின் எதிரொலி; ரஷ்யாவில் விசா, மாஸ்டர் கார்டுகளின் சேவை நிறுத்தம் 

March 5 (Reuters) –  உக்ரேன் மீதான  படையெடுப்பைக் கண்டித்து ரஷ்யா மீது  மேற்கத்திய  நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவின்  Visa,  Mastercard  நிறுவனங்கள்  ரஷ்யாவில்  அதன்  நிதி  சேவைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளன.

அந்த முடிவினால்,  ஏற்கனவே  பணவீக்கம்,  பொருளாதார நெருக்கடி,  இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான தடை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய மக்களின்  வாழ்க்கையை  மேலும் கடினமாக்குமென கூறப்படுகிறது.

இதனிடையே  மேற்கத்திய நாடுகளின் தடையினால் ரஷ்ய  மத்திய வங்கியின்  64,000 கோடி டாலர்  மதிப்பிலான் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.  அனைத்துலக  SWIFT  நிதி முறையிலிருந்து  ரஷ்யாவின் சில வங்கிகள் அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன் ரஷ்யாவின் ரூபிள்  நாணய மதிப்பும் பெரும் சரிவு கண்டிருக்கிறது. இவ்வாரத்தில்  மட்டும்  ரூபிள் நாணயம் அதன் மூன்றில் ஒரு  மதிப்பை இழந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!