கோலாலம்பூர், மார்ச் 3 – உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐநாவின் அவசர கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக மலேசியா வாக்களித்துள்ளது.
அந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து விவகாரங்களுக்கும் மலேசியா முழுமையாக உடன்படவில்லை என்றாலும், இறையாண்மை மற்றும் சுதந்திர நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பை எதிர்க்கும் நிலைப்பாட்டினை மலேசியா கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், உக்ரேன் – ரஷ்யா இடையிலான பிரச்சனைக்கு பேச்சு வார்த்தையின் மூலமாக சுமூகமான தீர்வு காணப்படுவதையே மலேசியா விரும்புவதாக, விஸ்மா புத்ரா இன்று ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.