நியு யோர்க், பிப் 22 – உக்ரேன் – ரஷ்யா போர் பதற்றத்தால் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் பாதிக்கக் கூடுமெனும் அச்சத்தில், இன்று முக்கிய ஆசிய பங்கு சந்தைகள் சரிவு கண்டன.
கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் அந்த பதற்ற நிலையால் எண்ணெய் விலை உயரக் கூடுமெனவும், வர்த்தகங்களைப் பாதிக்கும் விநியோக சேவைகளும் தடைப்படுமெனவும் அச்சம் எழுந்துள்ளது.