பினோம் பென், பிப் 25 – போர் தொடுக்கப்பட்டிருக்கும் Ukraine- னிலிருந்து , 11 மலேசியர்களை வெளியேற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
கிவ் (Kyiv) தலைநகரில் 8 பேர் தங்கியிருக்கும் நிலையில், எஞ்சிய மூவர் அத்தலைநகருக்கு வெளியே தங்கியுள்ளனர்.
அவர்களைப் பாதுகாப்பாக மீட்கும் கடப்பாட்டினை மலேசியா கொண்டிருப்பதாக, கம்போடியாவுக்கான தமது இரு நாள் பயணத்தின் இறுதியின்போது, பிரதமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.