Latestஉலகம்

உக்ரைனில் மீண்டும் மேக்டொனல்ஸ் திறப்பு

கீவ், செப் 23 – உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு மூடப்பட்டிருந்த மூன்று மேக்டொனல்ஸ் கிளைகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஏழு மாதங்களுக்கு பிறகு அவை திறக்கப்பட்டதால் கீவ் நகரில் குடியிருக்கும் மக்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் வரிசையில் நின்றனர்.

உணவு விநியோக பயன்பாடுகளுக்கான தேவை அதிகரித்ததால் அதிக ஊழியர்கள் மேக்டோனல்ஸ் கடைகளுக்கு தேவைப்படுவதாக உள்ளூர் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அடுத்த சில நாட்களில் கீவ் மற்றும் மேற்கு உக்ரைனில் கூடுதல் கிளைகளை மீண்டும் திறக்க மேக்டொனல்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் அடுத்த மாதம் முதல் உணவகத்தில் ஆர்டர் செய்து சாப்பிட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!