நியூயார்க், மார்ச் 3 – உக்ரைய்னிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா பொதுப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இரண்டு நாட்களாக நடைபெற்ற கடுமையான விவாதற்திற்குப் பின் ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில் 141 நாடுகள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, இலங்கை, பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் அந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன.
இதனிடையே இன்று அதிகாலை Kiev நகரில் நான்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிகுண்டுகளில் ஒன்று நகரின் மைய பகுதிகளிலும், இரண்டு நகரின் ரயில் நிலையம் அருகிலும் வெடித்தன, விமானத் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் அபாய எச்சகரிகை ஒலிகளும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தன.