கோலாலம்பூர், பிப் 28- உக்ரைய்னின் Kyiv நகரிலிருந்து வெளியேற்றப்பட்டு போலாந்திற்கு அழைத்து வரப்பட்ட 9 மலேசியர்களும் அவர்களுடன் தங்கியிருந்த மேலும் இருவரும் நாளை செவ்வாக்கிழமை கோலாலம்பூர் வந்தடைவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob தெரிவித்தார்.
மலேசியர்களுடன் சிங்கப்பூர் பிரஜையும் வெளியேற்றப்பட்டதாக தமது முகநூலில் பிரதமர் பதிவேற்றம் செய்துள்ளார். நட்புறவு மற்றும் அரசதந்திர அடிப்டையில் மலேசியர்களுடன் சிங்கப்பூர் பிரஜையையும் வெளியேறுவதற்கு நாம் உதவியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தனது பிரஜையை வெளியேற்றுவதற்கு உதவிய மலேசியாவுக்கு சிங்கப்பூர் தூதரகம் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.