கீவ், மார்ச் 1 – தாயகம் திரும்புவதற்காக இந்திய மற்றும் ஆப்பிரிக்க மாணவர்கள் உக்ரைய்னின் அண்டை நாடுகளை நோக்கி சென்றபோது எல்லைப்பகுதிளில் அவர்களிடம் உக்ரைய்ன் அதிகாரிகள் இனத்துவேசத்துடன் தாக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைய்னில் ரயில் நிலையம் ஒன்றில் பாதுகாவலர்கள் ஆப்பிரிக்க மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். உக்ரைய்னுக்கான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் போலாந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவேக்கியா ஆகிய நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் போலாந்து எல்லையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாகவும் எல்லையை கடக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான வீடியே ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
மேலும் உக்ரைய்ன் எல்லையை நோக்கி மாணவர்கள் உடமைகளுடன் செல்லும்போது உக்ரைய்ன் பாதுகாவலர் ஒருவர் மாணவரை எட்டி உதைக்கும் காட்சியும் காணொளியில் பதிவாகியுள்ளது.