கீவ், மார்ச் 2 – உக்ரைய்னின் Kharkiv வட்டாரத்தில் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவம் தலைநகர் Kyiv வில் உள்ள அந்நாட்டின் தொலைக்காட்சி கோபுரத்தையும் தாக்கியுள்ளது.
பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுத்க்கூடிய கொத்து குண்டுகளையும் ரஷ்யா வீசி வருவதாக கூறப்பட்டது. ஈராக் மற்றும் சிரியாவில் அந்த வகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை தாம் பார்த்துள்ளதாக பிரிட்டிஷ் ராணுவத்தின் முன்னாள் அதிகாரி Bretton Gordon தெரிவித்தார்.
நேற்று காலையில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டதாக உக்ரைய்ன் உள்துறை அமைச்சு அறிவித்தது. பதுங்கு குழியிலிருந்து வெளியேறி அருந்துவதற்கு நீர் தேடச் சென்ற நால்வர் குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகி மாண்டனர்.
இரண்டு பெரியோர்களும் மூன்று குழந்தைகள் பயணம் செய்த காரும் குண்டு வீச்சி தாக்குதலுக்கு உள்ளாகி எரிந்ததால் அவர்கள் அனைவரும் மாண்டனர்