கீவ் , பிப் 28 – உக்ரைய்ன் மீது தொடர்ந்து ரஷ்யா மூர்க்கத்தனமாக தாக்குதலை நடத்தி வருகிறது. அந்நாட்டின் இரண்டாவது நகரான Kharkiv வில் ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக உக்ரைய் படைகள் அறிவித்தன.
அங்குள்ள தெருக்களில் ரஷ்ய துருப்புகளை எதிர்த்து உக்ரைய்ன் ராணுவத்தினரும் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில் ஆயிரக்கணக்கான மக்கள் பதுங்கு குழிகளில் பாதுகாப்புக்காக இரவுப் பொழுதை கழித்தனர்.
வெடிப்பு சத்தங்கள் அதிகமாக கேட்டன. 9 மாடிகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் வயதான மூதாட்டி ஒருவர் மாண்ட வேளையில் சுமார் 60 பேர் அந்த கட்டிடத்தின் பதுங்கு குழியில் மறைந்திருந்து உயிர் பிழைத்தனர்.
அருகேயுள்ள இயற்கை எரிவாயு திரவமய குழாயையும் ரஷ்ய படைகள் வெடி வைத்து தகர்த்தனர். உக்ரைய்னில் இரவு முழுவதிலும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக பி.பி .சி தகவல்கள் தெரிவிக்கின்றன.