Latestஉலகம்

உக்ரைய்னில் ரஷ்யாவின் தாக்குதலில் இந்திய மருத்துவ மாணவர் மரணம்

கீவ் , மார்ச் 2 – உக்ரைய்னில் கார்கீவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற அந்த மாணவர் மரணம் அடைந்ததை இந்திய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியது.

அந்த மாணவர் கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைகக் கழகத்தில் மருத்துவத்துறையில் நான்காவது ஆண்டு பயின்று வந்தார். தமது அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்கு கீழே இருந்த பதுங்கு குழியில் தங்கியிருந்த அவர் நேற்று காலை மணி 8.50 அளவில் உணவு வாங்கச் சென்றிருந்தபோது கார்கீவ் நகரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் நவீன் மாண்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

அவரது மரணச் செய்தி இந்தியாவில் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலில் இந்தியாவின் மற்றொரு மாணவர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

உக்ரைய்னில் ஆறாவது நாளாக ரஷ்யப் படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைய்ன் தலைநகர் கீவ் மற்றும் கார்கீவ் நகரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.
இதனிடையே புதுடில்லியில் உள்ள ரஷ்யா மற்றும் உக்ரைய்ன நாடுகளின் தூதர்களை அழைத்து, இந்திய அரசாங்கம் அவர்களிடம் தங்களது ஆட்சேபத்தையும் தெரிவித்தது. அதோடு இந்திய மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்படி இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்ண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!