கீவ் , மார்ச் 2 – உக்ரைய்னில் முக்கிய நகரில் முற்றுகையிட்டுள்ள ரஷ்ய படையினர் கடுமையான பதிலடி தாக்குதலை எதிர்நோக்கி வருகின்றனர். இரண்டு மூன்று நாளில் உக்ரைய்ன் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கத்தில் கடந்த வியாழக்கிழமை ரஷ்ய அதிபர் Vladimar Putin உக்ரைய்னுக்கு எதிராக தாக்குதல் நடத்தும்படி தனது படைகளுக்கு உத்தரவிட்டார்.
உக்ரைய்னுக்கு எதிராக படையெடுப்பு தொடங்கி இன்றுடன் ஆறு நாட்களாகிவிட்ட போதிலும் உக்ரைய்ன் படைகளிடம் ரஷ்ய ராணுவம் தினறிக்கொண்டு இருக்கிறது. உக்ரைய்ன் நகர்களில் ரஷ்ய படைகள் முற்றுகையிட்டுள்ள போதிலும் அவ்வளவு எளிதாக இதர பகுதிக்குள் நுழைய முடியாதபடி உக்ரைய்ன் ராணுவ வீரர்கள் தொடந்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய படையினர் இன்னும் ஒரு நகரைக்கூட முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. இப்போதைக்கு ரஷ்யாவின் தாக்குதல் ஒரு முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. கார்கீவ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 12 க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.