கியுவ் , பிப் 24- இன்று விடியற்காலை 5 மணியளவில் உக்ரைய்னின் Kyiv நகரில் முதல் வெடிப்பு சத்தம் கேட்டதாக BBC செய்தியாளர் Paul Adams தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் அவர் கூறினார். Kyiv விமான நிலையத்தின் ஓடும் தளம் மற்றும் ராணுவ தலைமையகம் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே உக்ரைய்ன் மீதான தாக்குதலை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் Liz Truss கடுமையாக சாடினார். உக்ரைய்னுக்கு ஆதரவாக பிரிட்டன் இருப்பதாகவும் ரஷியாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு எங்களது அணைத்துலக நட்பு நாடுகளுடன் ஆலோசித்து வருகிறோம் என ‘ அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.