மாஸ்கோ, பிப் 24 – உக்ரைய்னில் Donbas வட்டாரத்திற்கு எதிராக ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் Vladimar Putin அறிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைய்ன் பகுதியிலுள்ள உக்ரைய்ன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அவர்களது விட்டிற்கு திரும்பும்படியும் Putin கேட்டுக்கொண்டார்.
தங்களது நாட்டிற்கு எதிராக ரஷ்ய முழு போரை தொடங்கியிருப்பதாக உக்ரைய்ன் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டினார். தனது நடடிக்கைக்கு ரஷ்யா பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதோடு ரஷ்யாவின் நடவடிக்கையால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படும் என அமெரிக்க அதிபர் Joe Biden எச்சரித்துள்ளார்.
இந்த சிரமமான காலத்தில் உக்ரைய்னுக்கு துணையாக இருப்போம் என Nato தலைவர் Jens Stolberg கூறியுள்ளார். உக்ரைய்னை பாதுகாப்பதற்கு நேட்டோ நாடுகள் முழு நடவடிக்கையில் இறங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யா படையெடுப்பை நடத்தினால் ஐரோப்பிய வட்டாரத்தில் மிகப்பெரிய போர் ஏற்படலாம் என உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelensky எச்சரித்துள்ளார். உக்ரைய்ன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எங்களை தற்காத்துக் கொள்வோம் என்றும் அவர் சூளுரைத்தார்.