கீவ் , பிப் 26 – ரஷ்ய அதிபர் விலடிமர் புதின் உத்தரவை தொடர்ந்து உக்ரைய்ன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பல நகரங்களில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக உக்ரைய்னிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
தலைநகர் கீவ்வை கவிழ்ப்பதோடு உலக வரைபடத்தில் உக்ரைய்னை அழிப்பதுதன் ரஷ்ய அதிபர் விலடிமர் புதினின் திடடம் என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.