லண்டன், பிப் 14 – இம்மாதம் 20 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி முடிவடைவதற்கு முன் உக்ரைய்னுக்கு எதிராக ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் அதிகரித்துள்ளன. இதனால் உக்ரைய்னிலிருந்து வெளியேறும்படி தங்களது பிரஜைகளுக்கு அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி,பிரிட்டன், அயர்ல்ந்து, பெல்ஜியம், நெதர்லாந்து,கனடா ,ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உக்ரைய்னின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள தனது எல்லைப் பகுதிக்கு செல்ல வேண்டாமென தனது மக்களுக்கு இத்தாலி கேட்டுக்கொண்டது. கனடா kiev விலுள்ள தனது தூதரகத்தை மூடிவிட்டது. நெதர்லாந்து உக்ரைய்னுக்கான அனைத்து விமானச் சேவைகளையும் ரத்துச் செய்தது. உக்ரைய்னுக்கு கூடுதலான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கப்படும் என பிரிட்டிஷ் பிரதமர் Boris Johnson அறிவித்துள்ளார்.
இதனிடையே மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் அஞ்சவில்லையென சுவிடனுக்கான ரஷ்யா தூதர் Victor Tatarintsev கூறியுள்ளார். எங்களால் சொந்த காலில் நிற்க முடியும் என்றும் அவர் ‘தெரிவித்தார்.