மாஸ்கோ, பிப் 25- உக்ரைய்ன் மீது தாக்குதல் நடத்திய அதிபர் Vladimir Putin னின் நடவடிக்கையை கண்டித்து ரஷ்யா முழுவதிலும் பல இடங்களில் மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஷ்யாவின் 51 நகர்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டாத்தில் சுமார் 1,400 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய போலீசார் தெரிவித்தனர். மாஸ்கோவில் மட்டும் 700 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரான Sanint Petersburgகில் ( செய்ன்ட் பீட்டர்ஸ்பெர்க் ) 340க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
சட்டத்திற்கு விரோதமான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோருக்க எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய உள்துறை அமைச்சும் எச்சரித்துள்ளது. உக்ரைய்ன் மீது போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படி மக்களை கேட்டுக்கொள்ளும் சமூக வலைத்தளங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.