கீவ், மார்ச் 4 – உக்ரைய்னின் முக்கிய நகர்களில் ரஷ்ய படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதல்கள் தொடர்கின்றன. உக்ரைய்னின் முக்கிய துறைமுகமான Mariupol லிலும் ரஷ்ய படையினர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். உக்ரைய்ன் நகர்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலால் முக்கிய நகர்களில் மின் மற்றும் நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனிடையே உக்ரைய்னில் நடத்தப்பட்ட படையெடுப்பில் குறைந்தது 500 ரஷ்ய வீரர்கள் மாண்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் Igor Konashenkov தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் போரில் 1,507 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தாகவும் அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close