பாரிஸ், மார்ச் 4 – உக்ரைய்ன் நிலைமை மிகவும் மோசமடையக்கூடும் என பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron கோடிகாட்டினார். ரஷ்ய அதிபர் Vladimir Putin னுடன் தொலைபேசியில் நடத்திய சந்திப்புக்குப் பின்னர் அவர் இந்த அச்சத்தை வெளியிட்டார். உக்ரைய்னை முழுமையாக கைப்பற்றும் திட்டத்தை Putin கொண்டிருப்பதால் உக்ரைய்னுக்கு எதிரான அவரது நடவடிக்கை தொடரும் என்றும் Emanauel Macron நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைய்ன் மீதான தாக்குதலை நிறுத்தும் திட்டத்தையும் Putin கொண்டிருக்கவில்லை. எனினும் உக்ரைய்ன் நிலைமை மோசமடைவதை தடுப்பதற்கு அரசதந்திர முயற்சிகளை தாம் தொடரப்போவதாகவும் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். சமரசத்திற்கு வரும் திட்டத்தை Putin கொண்டிருக்கவில்லை என்பது அவருடன் தாம் நடத்தப்பட்ட 90 நிமிட நேர சந்திப்பின்போது தெரியவருவதாக Emanauel Macron குறிப்பிட்டார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago