மாஸ்கோ, மார்ச் 3 – உக்ரைன் மீது படையெடுப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து ரஷ்யாவில் எதிர்ப்புணர்வு அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் முக்கிய நகரான St Petersburg கில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் போருக்கு எதிரான மறியலில் கலந்துகொண்ட 100 க்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
போர் வேண்டாம், போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அந்த மறியலில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த வியாழக்கிழமை உக்ரைய்ன் மீதான போரை ரஷ்யா தொடங்கியது முதல் அதற்கு எதிராக எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 7,000க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.