வாஷிங்டன், பிப் 16 – உக்ரைய்ன் எல்லையிலிருந்து தனது படைகளில் சிலவற்றை ரஷ்யா மீட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியான போதிலும் உக்ரைய்ன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் சாத்தியம் இன்னமும் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
ரஷ்யாவுடன் நேரடியாக மோதிக்கொள்வதற்கு அமெரிக்க விரும்பவில்லை. ரஷ்ய மக்கள் எங்களது எதிரியும் அல்ல. ஆனால் ரஷ்யா உக்ரைய்ன் மீது தாக்குதல் நடத்தி அங்குள்ள அமெரிக்கர்கள் காயம் அடைந்தால் அதைப் பார்த்துக்கொண்டு அமெரிக்கா மௌனமாக இருக்காது என்றும் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது தெரிவித்தார்.