கீவ் , மார்ச் 2 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் உக்ரைய்னின் விண்ணப்பத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த விண்ணப்பத்தில் உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelensky கையெழுத்திட்டார்.
அவர் காணொளி மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றினார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதன் மூலம் இப்போது ரஷ்ய படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட உக்ரைய்ன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் நுழைய முடியும் என அவர் கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையும் உக்ரைய்ன் விண்ணப்பத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 637 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். 13 பேர் மறுப்பு தெரிவித்தனர். இதர 26 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.