கீவ், மார்ச் 7 – உக்ரைய்னின் மத்திய பகுதியில் Vinnytsia பயணிகள் விமான நிலையத்தை ரஷ்ய ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைய்ன் அதிபர் Volydymyr Zelensky உறுதிப்படுத்தினார். எட்டு ஏவுகணைகள் தாக்கப்பட்டதில் விமான நிலையம் முற்றாக அழிந்ததாக அவர் தெரிவித்தார். அந்த தாக்குதலை ரஷ்ய வெளியுறவு அமைச்சரும் பின்னர் உறுதிப்படுத்தினார். Russia மற்றும் Belarus எல்லையிலிருந்து உக்ரைய்னின் மேற்கு வட்டாரமான Vinnytsia சற்று தூரத்தில் இருந்தாலும் இதற்கு முன் ரஷ்ய படைகள் அங்கு தாக்குதல் நடத்தியதில்லை. இதனிடையே உக்ரைய்ன் வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
Related Articles
Check Also
Close