புதுடில்லி, மார்ச் 4 – உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்திய விவகாரம் குறித்து Quad அமைப்பின் தலைவர்களான அமெரிக்க அதிபர் Joe Biden, ஆஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்றும் ஜப்பானிய பிரதமர் Fumio Kishida ஆகியோருடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச்சு கலந்துரையாடல் நடத்தினார். இப்போதைய போர் நெருக்கடியை தீர்ப்பதற்கு அரச தந்திர ரீதியில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையம் வாயிலாக நடைபெற்ற குவாட் உச்சநிலைக் கூட்டத்தில் பேசிபோது மோடி வலியுறுத்தினார். ஐ.நாவின் சாசனத்திற்கு ஏற்ப மற்ற நாடுகளின் இறையாண்மைக்கும் மற்ற நாடுகளின் ஒருமைப்பாட்டிற்கும் மரியாதை அளிப்பதற்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மோடி சுட்டிக்காட்டினார் .
Related Articles
Check Also
Close