நியூயார்க், பிப் 22 – உக்ரைய்ன் நெருக்கடி மிகவும் மோசமடைந்துவரும் இவ்வேளையில் ஐ.நா பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டம் நேற்று கூடியது. உக்ரைய்னிலிருந்து பிரிந்த இரண்டு வட்டாரங்களை ரஷ்யா அங்கீகரித்ததோடு தனது துருப்புக்கள் அப்பகுதிக்கு அமைதி காக்கும் பணிக்கு அனுப்பப்படும் என ரஷ்யா அறிவித்தது.
ரஷ்ய அதிபர் Vladimar Putin இந்த அறிக்கை விவேகமற்றது என அமெரிக்கா வருணித்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைய்ன் விவகாரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. உக்ரைய்ன் தோல்வி அடைந்த நாடு என்பதோடு மேற்கத்திய நாடுகளிள் கைப்பவையாக செயல்பட்டு வருவதாக ரஷ்ய அதிபர் குற்றஞ்சாட்டினார்.