
சான் ஜுவான், ஜன 20 – உலகின் மின்னல் வேக ஓட்டக்காரரான உசைன் போல்ட், தனது தனியார் முதலீட்டு கணக்கிலிந்து ஒரு கோடியே 27 லட்சம் அமெரிக்க டாலரை இழந்தார்.
சமந்தப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு, போல்ட்டின் வழக்கறிஞர், Stock & Securities எனும் சம்பந்தப்பட்ட தனியார் முதலீட்டு நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, ஜமைக்கா அதிகாரிகளும் அவ்விவகாரம் தொடர்பில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன் போல்ட்டின் கணக்கில், ஒரு கோடியே 28 லட்சம் அமெரிக்க டாலர் பணம் இருந்த வேளை, தற்போது அதில் வெறும் 12 ஆயிரம் அமெரிக்க டாலர் மட்டுமே எஞ்சியுள்ளது.
அது மிகப் பெரிய மோசடி வேலை என குறிப்பிட்ட உசைன் போல்ட்டின் வழக்கறிஞர், பணம் உடனடியாக திரும்ப தரப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் பதிவுச் செய்யப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.
எனினும், அவ்விவகாரம் தொடர்பில், சம்பந்தப்பட்ட தனியார் முதலீட்டு நிறுவனம் இதுவரை கருத்துரைக்கவில்லை.