புது டில்லி , பிப் 25 – ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைப்பேசி வாயிலாக அழைத்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உக்ரேய்ன் மீதான் போரை உடனடியாக நிறுத்தும்படி வலியுறுத்தி இருக்கின்றார்.
ரஷ்யாவின் நடவடிக்கை தொடர்பில், உலகின் பல நாடுகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கா , பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவுடன் நல்லுறவைப் பாராட்டும் இந்தியா , உக்ரேன் மீதான போர் தொடர்பில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமெனவும், புதினுடன் பேசும்படியும் உக்ரேன் தூதர், நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதையடுத்து , புதினிடம் பேசிய மோடி போரை உடனடியாக நிறுத்தும்படியும், பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைக்கு தீர்வு காணும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார்.