Latestமலேசியா

உடம்புப்பிடி நிலையத்தில் அதிரடி சோதனை; 18 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர், ஜூன் 22 – கோலலம்பூர் செராசில் இரண்டு உடம்புப்பிடி நிலையங்களில் சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 18 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். இரவு 8 மணியளவில் தொடங்கிய அந்த சோதனையில் 9 தாய்லாந்து பெண்களும், சீனாவைச் சேர்ந்த இரண்டு பெண்களும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு பெண்களும், மூன்று ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் வான் முகமட் சவ்வி வான் யூசோப் ( Wan Mohamad Saupee wan Yusof ) தெரிவித்தார்.

24 முதல் 45 வயதுடைய அவர்கள் அனைவரும் பயண ஆவணங்களை கொண்டிருக்காதது உட்பட பல்வேறு விதிமுறைகளை மீறியதால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1959 மற்றும் 1963 ஆம் ஆண்டின் குடிநுழைவு சட்டங்கள் மற்றும் குடிநுழைவு விதிமுறைகளை மீறியது தொடர்பில் விசாரணைக்காக அவர்கள் கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!