
மலாக்கா, டிச 25 – உடற் பேறு குறைந்த மகனைப் பயன்படுத்தி கொள்ளையிட துணிந்த ஆடவனைப் போலீசார் கைது செய்தனர். மலாக்கா, Batu Berendam-மில் உள்ள, பலசரக்கு கடையில் நிகழ்ந்த அந்த கொள்ளை சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட கடை ஊழியர் போலீஸ் புகார் செய்ததாக , Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார்.
சம்பவத்தின் போது கத்தியைக் கொண்டு கொள்ளையிட்ட அந்த ஆடவன் 197 ரிங்கிட்டையும், 3 Dunhill சிகரெட் பெட்டிகளையும் திருடிச் சென்றதாக , அவர் கூறினார். இவ்வேளையில், அந்த கொள்ளை நிகழ்ந்து ஐந்து மணி நேரத்திற்குள், வேலையில்லாத அந்த 32 வயது ஆடன் கைது செய்யப்பட்டதோடு, அவன் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.