சென்னை, ஆகஸ்ட் -27 – உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.
தொடக்கத்தில் You Tube-பில் பிரபலமான பிஜிலி ரமேஷ், கோமாளி, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர இரசிகரான பிஜிலி, அவரைப் போலவே செய்து காட்டி பிரபலம் அடைந்தார்.
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியிலும் தோன்றி இரசிகர்களை அவர் மகிழ்வித்துள்ளார்.
பிஜிலி ரமேஷின் மறைவுக்கும் இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.