
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில், புரோட்டோன் வீரா ரக கார் ஒன்றை மறித்த பெண், தமது கணவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டே அவ்வாறு செய்ய நேர்ந்ததாக கூறியுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பான காணொளி வைரலானதை அடுத்து, விளக்கமளிக்க, தமது 58 வயது கணவருடன் போர்ட் டிக்சன் போலீஸ் நிலையத்திற்கு நேற்று அப்பெண் வந்ததை, போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் ம் ஹுசைன் உறுதிப்படுத்தினார்.
வீட்டை விட்டு வெளியேறிய கணவரின் காரை, அண்டை வீட்டுக்காரரின் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த அந்த 32 வயது இந்தோனேசியப் பெண், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் காரை மறித்ததை ஒப்புக் கொண்டார்.
அதே சமயம், அச்சம்பவம் குறித்து அவ்விருவரும் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்புக் கோரியதாகவும், முஹமட் முஸ்தபா சொன்னார்.