கோலாலம்பூர், பிப் 20 – கோவிட் தொற்றுக்கு ஆளான 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்கள் மத்தியில், இருதயம், நுரையீரல், மூளை போன்ற உடல் உறுப்புகள் வீக்கமடைந்து அழற்சி ஏற்படலாமென , சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.
2020 ஜூன் தொடங்கி 2021 டிசம்பர் வரையில் , 18 வயதுக்கு கீழ்பட்ட 174 சிறுவர்கள் அத்தகைய உடல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் எழுவர் உயிரிழந்துள்ளனர் . மேலும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் அத்தொற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகளை நீண்ட காலம் அனுபவிக்கக் கூடுமென டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா எச்சரித்துள்ளார்.
அதையடுத்து, கோவிட் தொற்று கண்ட சிறார்கள் கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்படி அவர் அறிவுறுத்தினார்.