கோலாலம்பூர், பிப் 10 – உடல் உழைப்பு தொழிலாளர்களின் பிரச்சனையை மலேசியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியவை கூட்டாக தீர்க்க முடியும் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார். அமெரிக்க தூதர் Brian DMcfeeters, பிரிட்டிஷ் தூதர் Charles Hay ஆகியோரை சந்திக்க விருப்பதாகவும் உடல் உழைப்பு தொழிலாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் பிரச்னையை கையாண்ட விவகாரத்தில் அவ்விரு நாடுகளும் தங்களுக்கு இருக்கும் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்கு முன்வந்துள்ளதாகவும் சரவணன் கூறினார்.
உடல் உழைப்பு தொழிலாளர்கள் அம்சத்தில் ஆள் கடத்தல் விவகாரமும் சம்பந்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைகளையும் தொழிலாளர் சட்டங்களை பின்பற்றுவதிலும் மலேசியா உறுதியான கடப்பாட்டை கொண்டிருப்பதாகவும் சரவணன் தெரிவித்தார். கட்டாய உடல் உழைப்பு தொழிலாளர்கள் உட்பட ஆள்கடத்தல் குற்றங்களை துடைத்தொழிக்கும் சட்டங்கள் மலேசியாவில் உள்ளன. 1955 ஆம் ஆண்டின் தொழில் சட்ட திருத்தங்களின் பரிந்துரைக்கு ஏற்ப முறையான வகையில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் கடப்பாட்டை மனித வள அமைச்சு கொண்டிருப்பதாகவும் சரவணன் விவரித்தார்.