ஜெர்தே, பிப் 3 – திரெங்கானு, Jertih பாலத்தில் இருந்து குதித்த ஆடவர் , வீட்டில் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வேளையில், அந்த ஆடவரை விசாரித்ததில், தனது உடலை குளிர்ச்சிப்-படுத்துவதற்காகவே ஆற்றில் குதித்ததாக தெரிவித்ததாக, பெசுட் ( Besut ) மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Azrol Anuar Nor தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று காலை , Jertih பாலத்தில் இருந்து ஆடவர் குதித்ததாக பெறப்பட்ட தகவலை அடுத்து, அப்பகுதியில் போலிசார் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை பாலத்தில் இருந்து குதித்த ஆடவரின் மனைவி போலீஸ் நிலையத்திற்கு வந்து, தனது கணவர் வீடு திரும்பியிருப்பதாக தெரிவித்ததாக Azrol Anuar Nor கூறினார்.